வேலூர்மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று (ஜூன்.21) மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பள்ளிகள் திறந்திருப்பதால் மாணவர்களுக்கு சீராக தலைமுடி வெட்ட வேண்டும்.
புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல் - எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர் - சலூன் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்த வேலூர் மாவட்ட ஆட்சியர்
பள்ளிகள் திறந்திருப்பதால் மாணவர்களுக்குச் சீராக தலைமுடியை வெட்ட வேண்டும், வித விதமான சிகை அலங்காரம் செய்யும் சலூன் கடைகள் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சலூன் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்த வேலூர் மாவட்ட ஆட்சியர்
மேலும், வித விதமான சிகை அலங்காரம் செய்யும் சலூன் கடைகள் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடையும் உரிய முறையில் தைத்துத் தரவேண்டும் எனவும் தையல் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.