தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நேதாஜி காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு தடை: மாவட்ட ஆட்சியர் - வேலூர் மாவட்ட செய்திகள்

வேலூர்: நேதாஜி காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு தடை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நேதாஜி காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு தடை
நேதாஜி காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு தடை

By

Published : Apr 9, 2021, 6:45 PM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப். 9) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சண்முகசந்தரம் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள், பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "வேலூர் மாவட்டத்தில் 2020 பிப்ரவரி இறுதியில் 200 பேரில் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மார்ச் இறுதியில் 100 பேரில் நான்கு பேர் பாதிக்கப்பட்டனர். 2021 மார்ச் மாதம் இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை 90 பேராக உயர்ந்துள்ளது.

பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மாவட்ட மக்கள் தொகையில் 7 விழுக்காடு ஆகும். மாவட்ட மக்கள் தொகையில் 30 விழுக்காடு பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனி கரோனா பரிசோதனை செய்வது பயனற்றது. எனவே அதற்கு மாறாக தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். காய்கறி அங்காடி மூலமாக தொற்று பரவுவதை தடுக்க வேலூர் நேதாஜி காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்படும். அங்குள்ள சில்லறை வணிக கடைகள் மாங்காய் மண்டி மைதானத்திற்கு மாற்றப்படும். அங்கு கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவது குறித்து அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். நிறுவனங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். முதற்கட்டமாக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்படும். அப்போது அந்த நிறுவனங்களில் தடுப்பூசி போடப்படவில்லை என்றால் அதற்கு சீல் வைக்கப்படும்.

மக்களுடன் அதிக தொடர்பில் இருக்கக்கூடிய பேருந்து நடத்துனர்கள், வங்கி அலுவலர்கள், உணவகங்களில் பணிபுரிபவர்கள் ஆகியோரில் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும்.

கரோனா அதிகரித்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய படுக்கை வசதிகள் இல்லை. எனவே வரும் மாதங்களில் அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அரசு அறிவுரையின்படி போருந்துகளில் நின்று கொண்டு யாரும் பயணம் செய்யக் கூடாது. இதை தனியார் பேருந்து உரிமையாளர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான முகாம்கள் மறுபடியும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்‌.

இதையும் படிங்க: தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேணே்டும் - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்

ABOUT THE AUTHOR

...view details