வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சென்னாரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் கண்ணையாவின் மனைவி சரோஜா அம்மாள் (70), கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார்.
இவர் கடந்த ஜனவரி 17ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டம் விட்ட அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து சரோஜா அம்மாள் தலையில் பலமாக தாக்கியது மட்டுமின்றி, அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சரோஜா அம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.