வேலூர்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் துவங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த ரூகோ(RUCO) திட்டம், நேற்று (ஜூலை 13) வேலூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தினை, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார்.
RUCO(Repurposed Used Cooking Oil)திட்டம்
இத் திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் உள்ள சிறிய, பெரிய உணவகங்களில், பயன்படுத்தப்பட்ட பழைய எண்ணெய் சேகரித்து, பயோ டீசலாக (Bio Diesel) மறுசுழற்சி செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனம், லிட்டருக்கு ஏற்ப அதற்கான கட்டணத்தை உணவகங்களுக்கு வழங்கி பெற்றுக்கொள்ளும். மேலும் பெறப்பட்ட எண்ணெய் பயோ டீசலாக (Bio Diesel) மறுசுழற்சி செய்யப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது.
2018ம் ஆண்டு FSSAI யால் (Food Safety and Standards Authority of India) துவக்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் பாதுகாப்பு துறையினரின் கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.