தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு: இ.கம்யூ. போராட்டம்! - Communist Party of India protest at Thirupathur

திருப்பத்தூர்: ஆத்தூர் குப்பம் பகுதியில் உள்ள சுடுகாட்டின் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

By

Published : Jan 7, 2020, 11:46 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்குள்பட்ட செருவுகிந்தனப்பள்ளி, பட்டுவெள்ளையூர், போயர் வட்டம் போன்ற பகுதிகளில் உள்ள சுடுகாடு ஆக்கிரமிப்புகளை அகற்றி தரக்கோரியும், சுடுகாட்டிற்கு செல்லும் பாதை, சுடுகாட்டை சுற்றி தடுப்புவேலி அமைத்து தரக்கோரியும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் கிராம மக்கள் புகார் அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கை இல்லாததால், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இதற்கு கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் முல்லை தலைமை தாங்கினார். இதில், செருவுகிந்தனப்பள்ளி, பட்டுவெள்ளையூர், போயர் வட்டம் பகுதிகளில் உள்ள சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சுடுகாட்டை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும், நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க வேண்டும், திருப்பத்தூர் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும், நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும், பாலாற்றில் நடக்கும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: ரூ.32 லட்சம் மதிப்பிலான கொழும்பு தங்கம் சென்னையில் பறிமுதல்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details