திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த உடையராஜபாளையம் கிராமத்தில் தண்ணீர் தேடி புள்ளிமான் ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதனைக் கண்ட அப்பகுதி நாய்கள் குரைத்தப்படி துரத்தியதில் மான் பயந்து அங்கிருந்த வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தது.
தண்ணீர் தேடி ஊருக்குள் புகும் காட்டு விலங்குகள்! - undefined
வேலூர்: ஆம்பூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Deer caught by public
அப்பகுதி மக்கள் மானை உடனடியாகப் பிடித்து, ஆம்பூர் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அங்கு விரைந்தசென்ற வனத் துறையினர், பொதுமக்களிடமிருந்து மானை பிடித்துச்சென்று சான்றோர்குப்பம் காப்புக்காடு வனப்பகுதியில் விட்டனர்.
TAGGED:
Deer caught by public