தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆழ்துளைக் கிணறு விவகாரம் - மிரட்டும் நபர் மீது நடவடிக்கை தேவை

வேலூர்: குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை பயன்படுத்தவிடாமல் மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்

By

Published : Jun 19, 2019, 4:42 PM IST

Updated : Jun 19, 2019, 5:48 PM IST

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த கெங்காபுரம் கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணற்றில் இருந்து அதிகளவு தண்ணீர் வந்ததையடுத்து கிராம மக்கள் அந்த தண்ணீரைப் பயன்படுத்திவந்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள்

இந்நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவர் ஆழ்துளைக் கிணறு புறம்போக்கு நிலத்தில் போடப்பட்டுள்ளதால், தனது விவசாய நிலம் பாதிக்கப்படுவதாகவும், ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக்தித்தில் மனு அளித்தனர்.

Last Updated : Jun 19, 2019, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details