தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி ஆரம்பம்...! - வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்

வேலூர்: தீபம் கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தார்.

Deepavali special discount starts at Deepam shop
Deepavali special discount starts at Deepam shop

By

Published : Oct 13, 2020, 2:52 PM IST

2020 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் அண்ணா சாலையில் உள்ள தீபம் கோ-ஆப்டெக்ஸில், தீபாவளி சிறப்பு விற்பனையை வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று (அக்டோபர் 13) தொடக்கி வைத்தார்.

வேலூர் மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸின் 15 விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு ரூ. 9.47 கோடிக்கு விற்பனையானது.

இந்த ஆண்டு விற்பனை இலக்கு 11 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு சலுகையாக அனைத்து வகை பொருள்களும் 30 விழுக்காடு வரை தள்ளுபடி விலையில் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் மற்றும் அத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details