தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், ஆற்காடு, திருப்பத்தூர், வாணியம்பாடி, காட்பாடி ஆகிய இடங்களில் கற்பகம் அங்காடி மூலம் பட்டாசு விற்பனை செய்யப்பட திட்டமிடப்பட்டது.
அதன்படி இன்று (நவ. 04) விற்பனை தொடங்கியது. அதனை மாவட்ட ஆட்சியர், சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார். இங்கு சந்தை விலையைவிட குறைவான விலைக்கே பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன.