தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முககவசம், சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயம்- வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் !

வேலுர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

முககவசம், சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் !
முககவசம், சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் !

By

Published : Jun 21, 2022, 12:17 PM IST

வேலூர்: மாவட்டத்தில் கரோனா 3ஆவது அலைக்குப் பிறகு தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்த நிலையில் அண்மைக் காலமாகத் தொற்று பாதிப்பு சற்றே அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒன்று, இரண்டு எனத் தொற்று பதிவாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்குத் தொற்று பாதித்துள்ளது. சமீப நாட்களில் 21 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 15 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்

இந்நிலையில் மேலும் தொற்று பரவலைத் தடுக்க சில வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அனைவரும் முகக்கவும் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முககவசம், சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் !

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “பொது இடங்களில் இரு நபர்களுக்கிடையே 6 அடி தூரம் இடைவெளி விட்டு நிற்கவேண்டும். அனைத்து வணிக விற்பனை கூடங்கள் மற்றும் உணவகங்களில் கைகளைச் சுத்தம் செய்தல் கட்டாயமாக்கப்படுகிறது. நுழைவு வாயிலில் கைகளைச் சுத்தம் செய்திடும் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் ( A.C. ) பயன்படுத்தத் தடை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமண மண்டபங்களில் 100 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது , இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது. அனைவரும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் கட்டாயமாகப் போட்டுக்கொள்ளவும் கரோனா அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனைகளை அணுகிடுமாறு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதலமைச்சரை அவதூறாக விமர்சித்த முதியவர் கைது

ABOUT THE AUTHOR

...view details