தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் அதிகரித்துவரும் கரோனா தொற்று! - corona cases in vellore

வேலூர் மாவட்டத்தில் இன்று (டிச 30) ஒரேநாளில் 23 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேலூர்
வேலூர்

By

Published : Dec 30, 2021, 2:26 PM IST

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 336 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனையடுத்து படிப்படியாகத் தொற்று குறைந்துவந்தது.

இதனிடையே மீண்டும் கடந்த மாதம் முதல் தொற்று மெள்ள மெள்ள அதிகரிக்கத் தொடங்கியது. அந்தவகையில் நேற்று (டிசம்பர் 29) 19 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், இன்று (டிசம்பர் 30) மேலும் அதிகரித்து 23 பேருக்கு உறுதியாகியுள்ளது.

இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக புத்தாண்டின்போது பொது இடங்களில் கொண்டாடத் தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுவரை மாவட்டத்தில் 50 ஆயிரத்து 483 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 49 ஆயிரத்து 225 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 141 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க:33 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று

ABOUT THE AUTHOR

...view details