வேலூர்: காட்பாடியை சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன்( வயது 51) - பேபி ( வயது 50) தம்பதியினர். ரவிச்சந்திரன் காய் டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட (கனரா) வங்கியில் கடந்த 2015-ம் ஆண்டு தனது பெயரில் உள்ள சொத்து ஆவணத்தை கொடுத்து (சூரிட்டி) பிரிண்டிங் மிஷின் வாங்க ரவிச்சந்திரன் 10 லட்சமும், தொழில் மூலதன கடனாக பேபி 7 லட்சமும் என இருவரும் சேர்ந்து மொத்தம் 17 லட்சத்தை கடனாக பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் கடனை செலுத்தாததால் இதுவரை வட்டியுடன் சேர்ந்து 37 லட்சம் நிலுவையில் இருந்துள்ளது. இந்நிலையில் வங்கி நிர்வாகம் ரவிச்சந்திரனின் வீடுடன் கூடிய சொத்தை ஏலம் 19 லட்சத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏலம் விட்ட போது, அதனை காதர் அலி எப்பவர் ஏலம் எடுத்துள்ளார்.