தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் இருவருக்கு காயம் - காவல்துறையினர் விசாரணை - நாட்டு துப்பாக்கி பறிமுதல்

வேலூர்: முயல் வேட்டைக்கு சென்ற போது நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில் இருவர் காயமடைந்த நிலையில், அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Country gun shot accidentally
நாட்டு துப்பாக்கி வெடித்து காயம்

By

Published : Nov 23, 2020, 9:01 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காசிகுட்டை பகுதியை சேர்ந்தவர்கள் பூவரசன்(20), தன்ராஜ்(18). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள
சுடுகாட்டை ஒட்டிய இடத்தில் முயலை வேட்டையாட இரவில் நாட்டுத் துப்பாக்கியுடன் சென்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் முயலுக்காக காத்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நாட்டு துப்பாக்கி வெடித்துள்ளது. இதில் பூவரசன் மற்றும் தன்ராஜ் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் காயமடைந்தது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு காவல் துறையினர், பூவரசன், தன்ராஜிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையம் படிங்க: செல்போன் டவரில் ஏறி போராட்டம் செய்த இளைஞர் - மாறுவேடத்தில் சென்று மீட்ட தீயணைப்பு வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details