வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி ஒன்றாவது மண்டலத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார், பாலசந்திரகுமார் (52). வேலூர் சத்துவாச்சாரிப் பகுதியைச் சேர்ந்த இவருக்கு, கடந்த 5 நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, கரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
கரோனாவால் மாநகராட்சி அலுவலர் உயிரிழப்பு! - மாநகராட்சி அலுவலர் கரோனா
வேலூர்: கரோனா பாதிக்கப்பட்ட மாநகராட்சி அலுவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாநகராட்சி அலுவலர்
அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, காட்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனாலும், அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. மேல் சிகிச்சைக்காக சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (மே. 10) காலை உயிரிழந்தார்.
இதையும் படிங்க:சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று!