தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் புதிதாக 6 பேருக்கு கரோனா தொற்று! - Vellore Corona NEws

வேலூர்: மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்தது.

corona-virus-status-in-vellore
corona-virus-status-in-vellore

By

Published : May 7, 2020, 11:49 AM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக மட்டுமே வெளியே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் பேர்ணம்பட்டைச் சேர்ந்த மூன்று பேருக்கும், காட்பாடி புத்தூரைச் சேர்ந்த இரண்டு பேருக்கும், வங்கதேசத்திலிருந்து சென்னை வந்து பின்னர், வேலூர் வந்த ஒருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனால் வேலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனாவால் மற்ற தொற்றுகள் அதிகரிக்கும் - யுனிசெஃப் கவலை

ABOUT THE AUTHOR

...view details