வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 45 வயது மதிக்கத்தக்க நபர் நேற்று உயிரிழந்தார். இது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும். இருப்பினும், வேலூர் மாவட்ட மக்கள் பலர் தங்களை தற்காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவினை கடைப்பிடிப்பதில்லை.
இதையடுத்து, வேலூர் மாவட்ட ஒவியர் சங்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது சொந்த முயற்சியில் காவல் துறையினரின் உதவியோடு கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்துள்ளார்.