தமிழ்நாடு

tamil nadu

மத்திய சிறை கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி

By

Published : Jun 22, 2021, 2:38 PM IST

கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக வேலூர் மத்திய சிறையில் உள்ள சிறை காவலர்கள், கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

மத்திய சிறை கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி
மத்திய சிறை கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி

வேலூர்: மத்திய சிறையில் உள்ள கைதிகள், சிறைக்காவலர்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சிறையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த புதிதாக உள்ளே வரும் கைதிகள் கரோனா பரிசோதனைக்கு பிறகே சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

இதைத் தொடர்ந்து சிறையில் பணியாற்றும் அலுவலர்கள், சிறை காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வேலூர் ஆண்கள் சிறையில் அலுவலர்கள், காவலர்கள் 370 பேருக்கும், பெண்கள் சிறையில் சிறைக்காவலர்கள் 73 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நேற்று(ஜூன். 21) ஆண்கள் சிறையில் உள்ள 780 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இன்று(ஜூன். 22) இரண்டாம் கட்டமாக பெண்கள் சிறையில் உள்ள கைதிகள் 90 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;2 வயது குழந்தையின் அசத்தல் நினைவாற்றல்

ABOUT THE AUTHOR

...view details