காட்பாடி தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் மையங்களில் கலந்து கொள்ளபவர்களுக்கான தடுப்பூசி மற்றும் கரோனா பரிசோதனை முகாம் இன்று (ஏப். 27) காட்பாடி டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்பவர்களுக்கு கரோனா தடுப்பூசி! - வேலூர் செய்திகள்
வேலூர்: வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லும் கட்சி முகவர்கள், பத்திரிகையாளர்கள், வேட்பாளர்கள் ஆகியோர்களுக்கு கரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
![வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்பவர்களுக்கு கரோனா தடுப்பூசி! வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்பவர்களுக்கான கரோனா தடுப்பூசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:42:45:1619518365-tn-vlr-03-covid-test-and-vaccine-camp-for-counting-officers-vis-scr-thumb-7209364-27042021153339-2704f-1619517819-952.jpg)
வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்பவர்களுக்கான கரோனா தடுப்பூசி
இதனைக் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் சுகாதாரத்துரை ஆய்வாளர் பாலமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதே போன்று வேலூர், அரியூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தன.
இதில், தேர்தல் அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், வேட்பாளர்கள் , வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கு சுகாதாரத் துறையின் சார்பில் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.