வேலூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி (18) ஒருவரும், 33 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் கோவிட்-19 அறிகுறியுடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை கிண்டி ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மருத்துவ மாணவி உள்பட இருவருக்கு கோவிட்-19 அறிகுறி - இந்தியாவில் கரோனா வைரஸ்
வேலூர்: மருத்துவ மாணவி உள்பட இருவர் கோவிட்-19 அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் நீண்ட நாள்களாக காய்ச்சல், சளி இருந்ததால் தாமாக முன்வந்து மருத்துவமனையை அனுகியுள்ளனர். தற்போது அவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மருத்துவ மாணவியின் சகோதரி கடந்தவாரம் ஜெர்மனியிலிருந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தெலங்கானாவில் ஒரே நாளில் ஏழு பேருக்கு கரோனா!