வேலூர் மாவட்டம் கிரிஸ்டியன்பேட்டை, சேர்காடு, பொண்ணை, பத்திரபல்லி, சயனகொண்டா, பரதராமி ஆகிய ஐந்து தமிழ்நாடு-ஆந்திர எல்லைகளில் கரோனா கண்காணிப்பு, தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் கரோனா பாதுகாப்புப் பணி தீவிரம் - கரோனா வைரஸ்
வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு - ஆந்திர எல்லைகளில் கரோனா பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு எல்லை
மேலும் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டுவருகிறது.
இப்பரிசோதனையானது நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்டோருக்கு எடுத்துவருவதாக மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். அதுபோல நாளை (ஏப்ரல் 25) முதல் வேலூர் மாவட்டத்தின் 23 இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.