வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து கரோனா தடுப்பு மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அலுவலரும், போக்குவரத்துத் துறை ஆணையருமான தென்காசி எஸ்.ஜவகர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்! - வேலூர் செய்திகள்
வேலூர்: கரோனா பரவலைத் தடுக்கும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கரோனா சிறப்பு கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் கூறுகையில், 'பரிசோதனை முடிவுகளை விரைவில் தெரியப்படுத்த வேண்டும். மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய பிறகும் 14 நாள்கள் வீட்டுத் தனிமையில் இருப்பதைக் கண்காணிக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். காவல் துறையினர் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும். வரும் காலங்களில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்பதால், அதற்கேற்றார் போல் முன்னேற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்' உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.