தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் இரண்டாயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு - வேலூரில் இரண்டாயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

வேலூர் : புதிதாக 118 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 960ஆக அதிகரித்துள்ளது.

corona positive cases rises in thousand 960 at vellore district
corona positive cases rises in thousand 960 at vellore district

By

Published : Jul 5, 2020, 12:35 PM IST

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், இன்று (ஜூன் ஐந்து) மாநிலம் முழுவதும் எவ்வித தளர்வுகளுமற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி, புதிதாக 118 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 960ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த எண்ணிக்கை இன்னும் சில நாள்களில் இரண்டாயிரத்தை நெருங்கும் என்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 70 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details