தமிழ்நாடு

tamil nadu

கரோனா குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு!

வேலூர்: தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் விடுதியில் கரோனா சிறப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட மத்திய மாவட்ட தேமுதிக செயலாளர் உட்பட  6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

By

Published : Mar 20, 2020, 9:49 AM IST

Published : Mar 20, 2020, 9:49 AM IST

Updated : Mar 20, 2020, 10:09 AM IST

road
road

வேலூர் சாய்நாதபுரத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் விடுதியில் கரோனாவுக்கான சிறப்பு பிரிவு ஏற்படுத்துவதாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து தங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் ஆகவே தங்கள் பகுதியில் கரோனா சிறப்பு பிரிவு அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வேலூர் - ஆரணி சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

சாலை மறியல்

இதனையடுத்து சட்ட விரோதமாக கூட்டம் கூடியதாகவும், தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் கரோனா நோயாளி இருப்பதாக தவறான தகவல் பரப்பி பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்ப்படுத்தியது என மொத்த 4 பிரிவின் கீழ் சாய்நாதபுரத்தை சேர்ந்த 6 பேர் மீது பாகாயம் காவல் துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். இதில் ஒருவர் தேமுதிக கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

Last Updated : Mar 20, 2020, 10:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details