தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் சிறைக்கைதிகள் எட்டு பேருக்கு கரோனா உறுதி - vellore latest news

வேலூர் : வேலூர் சரகத்திற்குட்பட்ட மத்திய சிறை, திருப்பத்தூர், போளூர் உள்ளிட்ட கிளை சிறைகளில் உள்ள எட்டு பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் சிறைக்கைதிகள் எட்டு பேருக்கு கரோனா உறுதி
வேலூரில் சிறைக்கைதிகள் எட்டு பேருக்கு கரோனா உறுதி

By

Published : Jun 3, 2021, 4:03 PM IST

வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள வேலூர் மத்திய சிறை, வேலூர் சரகத்திற்குட்பட்ட திருப்பத்தூர், போளூர் உள்ளிட்ட கிளைச் சிறைகளில் உள்ள மொத்தம் எட்டு கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் மூன்று கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று திருப்பத்தூர், போளூர் கிளைச் சிறைகளில் தலா இருவருக்கும், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் ஒருவருக்கும் என இதுவரை மொத்தம் எட்டு கைதிகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட எட்டு கைதிகளில் நால்வர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறைக்கைதிகள் கரோனா தொற்றால் பாதிக்காத வகையில் முதல்கட்டமாக நூறு பேருக்கும், இரண்டாம் கட்டமாக 150 பேருக்கும் என, இதுவரை சுமார் 250 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் போதிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் சிறைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : பயோலாஜிக்கல் இ தடுப்பூசி - 30 கோடி டோஸ் முன்பதிவு

ABOUT THE AUTHOR

...view details