தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர்: தனியார் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

corona awarness program got a place in kalam's record book
corona awarness program got a place in kalam's record book

By

Published : Feb 14, 2020, 6:57 PM IST

சீன நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரஸ் பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை உண்டாக்கிவருகிறது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இந்த லைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எண்ணிய தி பிரிட்ஜ் அறக்கட்டளை நிர்வாகி மதிவாணன், ஆயிரம் மாணவர்களைக் கொண்டு STAY AWAY FROM CORONA... அதாவது கொரோனாவிடமிருந்து விலகி நில் என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்த நிகழ்வு கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதுகுறித்து மதிவாணன் கூறுகையில், எனது அறக்கட்டளை மூலம் சமூக விழிப்புணர்வுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆயிரம் மாணவர்களைக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டுள்ளேன் என்றார்.

மேலும் படிக்க: கொரோனா வைரஸ் தாயிடமிருந்து சேயிக்குப் பரவாது' : லண்செட் இதழ்

ABOUT THE AUTHOR

...view details