வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
மதச்சார்பற்ற கூட்டணி தலைவர்கள் பாகுபாடு பார்க்காதிங்க..! - அமெரிக்கை நாராயணன் - bjp
வேலூர்: "மதச்சார்பற்ற கூட்டணி தலைவர்கள் பாகுபாடு பார்க்காமல், அனைத்து மத விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்" என, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள தலைவர்கள் பாகுபாடு பார்க்காமல் அனைத்து மத விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். எங்கள் கட்சித் தலைவர் அழகிரி ஈஸ்டர் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை வரவேற்கிறேன். அதேசமயம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிற மத விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறவில்லை என பொய் சொல்லியுள்ளார். ஆனால் ஐந்து ஆண்டுகளில் இதுவரை எட்டு முறை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதில் பல பேர் உயிரிழந்துள்ளனர்", என்றார்.