தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொருளாதார மந்த நிலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

வேலூர்: நாட்டின் பொருளாதார மந்த நிலையைக் கண்டித்தும், அதனை சரி செய்யக் கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

congress

By

Published : Nov 23, 2019, 11:50 PM IST

வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் காங்கிரஸ் கட்சி சார்பில், நாட்டின் பொருளாதார மந்தநிலையைக் கண்டித்தும் மத்திய அரசின் தவறாகக் கொள்கையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஸ்ரீ வெல்ல பிரசாத், காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டார்.

பொருளாதார மந்த நிலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாகப் பொருளாதார மந்தநிலை நிலவுவதைக் கண்டித்தும், பாஜகவின் மதவாத கொள்கையைக் கண்டித்தும், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க: மளிகைக் கடையில் திருடிய இளைஞர்கள் - 24 மணி நேரத்தில் பிடிக்க உதவிய சிசிடிவி

ABOUT THE AUTHOR

...view details