வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலைகளை உடைத்து குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் இதுவரை அந்த குழிகள் மற்றும் சாலைகளை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடனேயே கடந்து செல்லவேண்டியுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக எம்எல்ஏ போராட்டம் - municipality
வேலூர்: பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு தோண்டப்பட்ட குழிகள், சாலைகளை சீரமைக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக எம்எல்ஏ போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுக எம்எல்ஏ நல்லதம்பி தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் எம்எல்ஏவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் திருப்பத்தூர் - திருவண்ணாமலை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.