தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக வேலூர் மாவட்டத்தில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்புப் பணியை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " வேலூரில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதி வார்டுகளில் ஆறு ஆயிரத்து 121 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மூன்று ஆயிரத்து 131 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன" என்றார்.
உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிவரும் வேலூர் மாவட்டம் - Verification of Electronic Voting Machines in Vellore
வேலூர்: உள்ளாட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்த உள்ள ஆறு ஆயிரத்து 121 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
Completion of voting machines in Vellore, உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்த உள்ள மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியில் பெல் நிறுவனத்தைச் சேர்ந்த 18 பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த கட்டமாக அனைத்துக்கட்சி பிரமுகர் மத்தியில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும் என அவர் கூறினார்.
இதையும் படிங்க: நீலகிரியில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த ஆட்சியர் பரிந்துரை