வேலூர்: வேலூர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் பெங்களூருவில் வசித்துவருகிறார். இவர் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதான தனியார் பள்ளியின் தாளாளர் இளம்பெண்ணிடம் அறிமுகமாகி பேசியுள்ளார்.
பின்னர் யாரிடமோ இளம்பெண்ணின் அலைபேசி எண்ணைப் பெற்று 'ராங் நம்பர்'போல் இந்தி, தெலுங்கில் தாளாளர் பேசியுள்ளார். இது தொடர்ந்து 10 நாள்களாக நடைபெறவே, எதிர்முனையில் பேசியது யார் என்பதைக் கண்டுபிடித்த இளம்பெண் தாளாளரை எச்சரித்துள்ளார்.
இளம்பெண் குடும்பத்தாருக்கிடையே பிரச்சினை
இதனையடுத்து தாளாளர் அலைபேசி வாயிலாகவும். நேரடியாகவும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இளம்பெண், அவரின் கணவர் குடும்பத்தாருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பின்னர் பாலியல் தொல்லை குறித்து இளம்பெண், பொன்னை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இருப்பினும் காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் புகாரைப் பெறாமல் தாளாளருக்கு ஆதரவாக காவல் துறையினர் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்பெண் நேற்று (நவம்பர்16) புகாரளித்தார்.
இதையும் படிங்க:பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு; 3 பேர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு!