தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடன் கொடுத்தவரை மிரட்டியதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீது புகார்!

வேலூர்: கடனை திருப்பி கேட்டவரை மிரட்டியதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர்‌ மீது வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்‌ அளிக்கப்பட்டுள்ளது.

கடன் கொடுத்தவரை மீரட்டிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீது புகார்!
கடன் கொடுத்தவரை மீரட்டிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீது புகார்!

By

Published : Dec 12, 2020, 7:57 AM IST

வேலூர் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் குடியாத்தத்தில் மூன்று உணவகங்கள் நடத்தி வருகிறார். இதற்கு தேவையான மளிகை பொருட்கள், பேக்கிங் பொருட்கள் என பல்வேறு பொருட்களை குடியாத்தம் பிச்சனூர்பேட்டையைச் சேர்ந்த டி‌. சரவணன் என்பவரின் மளிகைக் கடையில் வாங்கிவருகிறார் .

இந்நிலையில், ராணுவத்தில் இருந்து தான் ஓய்வு பெற்றதாகவும், தனக்கு ரூ.89 லட்சத்து 90 ஆயிரம் வர இருப்பதாகவும், மேலும் கரோனா காலத்தில் மருத்துவர்களுக்கு உணவு வழங்கியதில் ரூபாய் 20 லட்சம் வர இருப்பதாகவும், அதுவரை உணவகங்கள் இயங்க பணம் தேவைப்படுகிறது எனக் கூறி மளிகை கடை உரிமையாளர் சரவணனிடம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ரூ. 33 லட்சத்து 50 ஆயிரம் கடனாக கேட்டுள்ளார்.

இதனை உண்மை என நம்பி பலரிடம் வட்டிக்கு வாங்கி, மளிகை பொருட்கள், தனிக் கடன் என மொத்தம் ரூ.45 லட்சத்தை மளிகை கடை உரிமையாளர் சரவணன் கடனாக கொடுத்துள்ளார் . நீண்ட நாட்களாகியும் கடனை திரும்பி கொடுக்காமல் காலம் கடத்தியதால், கடனை திருப்பி கேட்ட சென்ற மளிகை கடை உரிமையாளரை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தகாத வார்த்தைகளால் திட்டி, அவமானப்படுத்தியோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இந்நிலையில், மோசடி செய்யப்பட்ட பணத்தினை திரும்ப பெற்றுத்தரும்படி நேற்று (டிச.11) வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மளிகை கடை உரிமையாளர் டி‌. சரவணன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையித் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜே.பி. நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் : கொதித்த சிந்தியா - கலாய்த்த மம்தா பானர்ஜி!

ABOUT THE AUTHOR

...view details