வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறையில் மாநகராட்சி அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து காணப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் திடீரென அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
கட்டடத்தின் தன்மை குறித்தும், மாணவர்களின் கல்வித் திறன் குறித்தும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டார். பின்னர், மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு உணவு தயார் செய்யக்கூடிய காய்கறிகள் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது.