நிவர் புயல் காரணமாக நேற்று (நவ. 25) மாலை 6 மணிமுதல் வேலூரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டுவந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. மழை குறைந்ததால் இன்று (நவ. 26) மாலை 3 மணிமுதல் பேருந்துகளை இயக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார்.
அதன்படி தேவைக்கேற்ப இன்று (நவ. 26) மாலை 3.30 மணிமுதல் வேலூரிலிருந்து காட்பாடி, பாகாயம், ஆற்காடு, சென்னை, தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூரு, ஆம்பூர், வாணியம்பாடி, ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டுவருகிறது. குடியாத்தம், பள்ளிகொண்டா, பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்துள்ளதால் இவ்வழித்தடங்களில் பேருந்து இயக்கம் இல்லை.