வேலூர்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாணவர், மாணவிகளிடம் உங்களது கனவு குறித்து சொல்லுங்கள் என மாவட்ட ஆட்சியர் கேட்க, அதற்கு சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி துர்கா லட்சுமி ஐஏஎஸ் ஆக வேண்டும் எனத் தெரிவித்தார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாணவி துர்கா லட்சுமியை தனது இருக்கையில் அமர வைத்து 'உன்னுடைய கனவு நினைவாகட்டும்' என்று கூறி வாழ்த்து தெரிவித்து, மாணவ, மாணவிகள் 'அனைவரையும் நன்றாகப் படிக்கவேண்டும்' என்று கூறி ஊக்குவித்து மகிழ்ச்சி அடையச்செய்தார்.மாவட்ட ஆட்சியரின் இந்த செயல் மாணவர்களையும், அங்கிருந்தவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.