வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காத்தவராயன், உடல் நலக்குறைவால் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். ஆகையால், இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணிகளைச் செய்ய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணியை அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் மத்தியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதி காலியாகவுள்ளது. இதற்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், அதற்கு தயாராக முன்னேற்பாடுகளைச் செய்ய தேர்தல் ஆணையம் கூறியது.