தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூர் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு இன்னும் 11 ஏக்கர் விவசாயிகள் நிலங்கள் ஓடுதளத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை முடிக்க முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம் என விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

வேலூர் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வேலூர் விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

By

Published : Jun 1, 2022, 9:51 PM IST

வேலூர்:அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய விமான தளத்தை மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் விமானப்போக்குவரத்து துறை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய உத்தரவிட்டு அதற்கானப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.

இந்நிலையில் விமான ஓடுதளத்திற்காக மேலும் விவசாயிகளின் விளைநிலங்களில் 11 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினால் தான் விமான நிலைய விரிவாக்கப்பணிகளை தொடர முடியும் என்ற சூழலில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் அலுவலர்கள் வேலூர் விமான நிலையத்தில் இன்று ஆய்வு செய்தனர்.

அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டப்பட்டது. மேலும் ’சுமார் 11 ஏக்கர் நிலம் ஓடுதளத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ளது. அவைகளை அலுவலர்களைக் கொண்டு இனம் கண்டறிந்து அளவீடு செய்ய உத்தரவிட்டுள்ளோம். 80 விழுக்காடு விமான நிலைய விரிவாக்கப்பயணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளோம்’ என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:எரிபொருள் தட்டுப்பாடு: சென்னையிலிருந்து எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்லும் இலங்கை விமானங்கள்!

ABOUT THE AUTHOR

...view details