வேலூர்:வேலூர் மாவட்டத்தில் பொங்கலையொட்டி நடைபெறும் எருது விடும் விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் எருதுவிடும் விழாக் குழுவினர், காளை உரிமையாளர்களுடன் நேற்று (டிசம்பர் 30) ஆலோசனை நடத்தினர். இதில், அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை கட்டாயம் விழாக் குழுவினர் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் 82 கிராமங்களுக்கு எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், "சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருப்பதால், எருதுவிடும் விழாவை பிப்ரவரி மாத இறுதிக்குள்ளேயே நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எருது விடும் விழா நடைபெறுவதற்கு 2 நாள்களுக்கு முன்பாக மாடுபிடி வீரர்கள், பங்கேற்பாளர்கள், மாட்டுடன் வருபவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றைப் பெற்றிருக்க வேண்டும். பரிசோதனையை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக மேற்கொள்ளலாம்.