தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீங்களும் நாளை விஞ்ஞானியாகலாம் - மாணவர்களுக்கு ஊக்கமளித்த மாவட்ட ஆட்சியர்! - The Indians performed many scientific discoveries

திருப்பத்தூர்: நமது இந்தியர்கள் நவீன கருவிகள் இல்லாத காலத்திலேயே அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர் என்று திருப்பத்தூர் ஆட்சியர் சிவனருள் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

thiruppathur
thiruppathur

By

Published : Dec 26, 2019, 4:35 PM IST

திருப்பத்தூர் அரசு பூங்கா நிதியுதவி நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் லயன்ஸ் சங்கம் இணைந்து சூரிய கிரகணம் நிகழ்வை மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சிவனருள் தொடங்கிவைத்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார்.

மாணவர்களை உற்சாகப்படுத்தி பேசும் ஆட்சியர் சிவனருள்

அப்போது பேசிய அவர், "அறிவியல் உண்மைகள் எல்லாம் மேலை நாட்டார் கண்டுபிடித்து பாட புத்தகத்தில் வைத்து நமக்கு சொல்லித்தருவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அப்படியில்லை, நம் இந்திய நாட்டிலேயே அறிவியல் விஞ்ஞானிகள் இருக்கின்றனர். அதில் குறிப்பாக அப்துல் கலாம் , சி.வி. ராமன், ராமானுஜர் போன்றோர் பல அறிவியல் ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர்.

பண்டைய காலங்களில் பாரம்பரியமாக இந்த அறிவியல் நிகழ்வுகளை கண்டுபிடித்துள்ளனர். இந்த நவீன கருவிகள் இல்லாத காலத்திலேயே அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். இதே பள்ளியில்கூட அறிவியல் விஞ்ஞானி உருவாகலாம் அதற்கு உண்டான திறமையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: சூரிய கிரணத்தில் சிறப்பு வழிபாடு - ஸ்ரீகாளஹஸ்தியில் குவிந்த பக்தர்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details