இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019 - 20ஆம் ஆண்டிற்கான ஜெருசேலம் புனிதப் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவுகளை உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் இந்த பயணம் மேற்கொள்ள அனுமதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் பிற புனித தலங்களை உள்ளடக்கியது www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.