வேலூர் மாவட்டத்தில் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் குழந்தை திருமணங்கள் நடைபெற இருப்பதாக 1098 என்ற சைல்டு லைன் உதவி எண்ணுக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக சைல்டு லைன், சமூக நலத்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர்.
ஆய்வில் பள்ளி சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து குடியாத்தம் அடுத்த செட்டிக்குப்பத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமிக்கும், ஊசூர் அடுத்த அத்தியூரை சேர்ந்த 10- வது படிக்கும் 14 வயது சிறுமிக்கும், வேலூர் அடுத்த கருகம்புத்தூரை சேர்ந்த 10 -வது படிக்கும் 16 வயது சிறுமி என மொத்தம் 3 சிறுமிகளுக்கு இன்று (ஜூன் 9) மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தப்பட்டது.