வேலூர்:வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை(26). நர்சிங் படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடந்த ஓராண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
இந்தநிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.