வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதியேற்பு நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மாவட்ட ஆட்சியர், 'முன்பெல்லாம் நம் முன்னோர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். பெண்கள்தான் வீட்டில் அனைவரையும் விசாரிப்பார்கள்.
ஆனால், தற்போதைய நவீனக் காலத்தில் தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுக்குச் சரியான அன்பு, அரவணைப்பு கிடைப்பதில்லை. எனவே அன்பு செலுத்துபவர்களைத் தேடி குழந்தைகள் செல்கிறார்கள்.