வேலூர்: தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைதிகள் பயன்படுத்துவதை தடுக்க அடிக்கடி சோதனை நடைபெறும்.
அதன்படி ஜெயிலர் குணசேகரன் தலைமையிலான காவலர்கள் ஜெயில் வளாகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள 4-வது கண்காணிப்பு கோபுரத்தின் கீழே மண் தோண்டப்பட்டிருந்தது தெரியவந்தது.