தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரினுள் போன் பேசிக்கொண்டிருந்த டாக்டரிடம் செல்போன் பறிப்பு; விரட்டிப்பிடித்த மக்கள் - Vellore news

வேலூரில் காரினுள் அமர்ந்தவாறு போன் பேசிக்கொண்டிருந்த நபரிடம் செல்போனை பறித்த நபரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

காரினுள் போன் பேசிக் கொண்டிருந்தவரிடம் இருந்து செல்போன் பறிப்பு
காரினுள் போன் பேசிக் கொண்டிருந்தவரிடம் இருந்து செல்போன் பறிப்பு

By

Published : Dec 20, 2022, 6:28 PM IST

வேலூர்மாநகர் சி.எம்.சி மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர், காகிதப்பட்டறை சாலையின் ஓரம் காரை நிறுத்திவிட்டு, காரிலேயே அமர்ந்தவாறு செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட நபர், மருத்துவரின் செல்போனை பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.

அப்போது அந்த மருத்துவர் கூச்சலிட்டுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்களும் ஆட்டோ ஓட்டுநர்களும், செல்போனை பறித்துக்கொண்டு ஓடிய நபரைப் பிடித்துள்ளனர். பின்னர் செல்போனைத் திருடிய நபரை அடித்து உதைத்து, அவரிடம் இருந்து செல்போனை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர், செல்போனை திருடிய நபரைக் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் செல்போனைப் பறித்து ஓடும் முயற்சியில் ஈடுபட்டவர், சலவன்பேட்டை சாதுகார மடத்தெருவைச் சேர்ந்த கார்த்தி (22) என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கார்த்தியை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:'ஏலே... லைட்ட அமத்துல'; வடிவேலு பாணியில் விசாரணை செய்து நகையை மீட்ட காவல்துறை

ABOUT THE AUTHOR

...view details