வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் மத்திய பெண்கள் தனிச்சிறை அமைந்துள்ளது. இதில் விசாரணை கைதி ஒருவர் செல்போன் பயன்படுத்தி வருவதாக சிறைக்காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து இன்று சிறைக்காவலர்கள் திடீரென கைதிகளின் அறைகளில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், சேலத்தைச் சேர்ந்த மைதிலி (42) என்பவர் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தது. உடனே அதனைக் கைப்பற்றிய சிறைக்காவலர்கள் இதுகுறித்து உயர் அலுவலர்கள் உத்தரவின்பேரில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வேலூர் பெண்கள் மத்திய சிறையில் செல்போன் பறிமுதல் - வேலூர் மாவட்டச் செய்திகள்
வேலூர்: மத்திய பெண்கள் தனிச்சிறையில் விசாரணை கைதி ஒருவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
vellore-
இதேபோல் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவ்வப்போது செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது. குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகனின் அறையிலிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிறை கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் - 3 வார்டன்கள் பணியிடை நீக்கம்!