தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிசிடிவியில் சிக்கிய ஆடு, மாடு திருடும் கும்பல்! - ஆடு, மாடு திருடும் கும்பல்

வேலூர் : சேண்பாக்கத்தில் ஆடு, மாடுகளைத் திருடும் கும்பல் சிசிடிவி காட்சியில் சிக்கியதையடுத்து, விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளனர்.

cctv-footage-of-goat-theft
cctv-footage-of-goat-theft

By

Published : Oct 12, 2020, 5:10 PM IST

வேலூர் மாவட்டம், சேண்பாக்கத்தில் அடிக்கடி ஆடு, மாடுகளை ஒரு கும்பல் திருடிச்செல்வதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்ததால் ஆடு, மாடு வளர்ப்பவர்கள் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சேண்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பிரபு என்பவர் வீட்டில் இன்று (அக்.12) அதிகாலை நான்கு மணி அளவில் மூன்று இளைஞர்கள் அவரது வீட்டிலுள் புகுந்து ஆடுகளை திருடிச் செல்லும் காட்சி, அவர் வீட்டு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சிசிடிவியில் சிக்கிய ஆடு, மாடு திருடும் கும்பல்

இந்நிலையில், தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் இத்திருடர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேண்பாக்கம் பொதுமக்கள் புகாரளித்துள்ளனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் சிபிஐ சோதனை!

ABOUT THE AUTHOR

...view details