தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் விதிமுறை மீறல்; ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு! - vellore election

வேலூர்: மக்களவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் வேலூரில் நடைபெற்ற பரப்புரையின்போது தேர்தல் விதிமுறையை மீறியதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின்

By

Published : Aug 2, 2019, 8:49 AM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.

இந்நிலையில், ஸ்டாலின் நேற்று ஆம்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார். இது குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் நிலையில், உரிய அனுமதியின்றி கூட்டம் நடைபெற்றதாகக் கூறி தேர்தல் அலுவலர் சுஜாதா தலைமையிலான அலுவலர்கள் மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் திமுக தலைவர் ஸ்டாலின், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details