தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் விதிமுறை மீறல்: தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு! - Case filed against DMDK

வேலூர்: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக தேமுதிகவினர் 63 பேர் மீது தேர்தல் பறக்கும் படையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு  தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தேமுதிகவினர் மீது வழக்குப்பதிவு  தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் வழக்குகள்  Case filed against DMDK for violating election rules  Case filed against DMDK  Electoral Conduct Violation Cases
Case filed against DMDK for violating election rules

By

Published : Mar 2, 2021, 10:33 AM IST

தேமுதிகவின் துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் நேற்று முன்தினம் (பிப். 28) தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வேலூர் வந்திருந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச்1) காலை அவரை வரவேற்பதற்காக சத்துவாச்சாரியில் உள்ள தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் வேலூர் மண்டல தலைமை அலுவலகத்தின் முன்பு தேமுதிக நிர்வாகிகள் அணிவகுப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

தற்போது, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட தேர்தல் பறக்கும் படையினர் அனுமதியின்றி அணிவகுப்பு நடத்தியதாக மூன்று பிரிவுகளின் கீழ் தேமுதிகவின் வேலூர் மாவட்ட செயலாளர் கோபிநாத் உள்ளிட்ட 63 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:தேர்தல் விதிமுறை மீறல்... திமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details