வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள நெனக்கினி மலைப்பகுதியில் ஜெய்சங்கர் என்பவருக்குச் சொந்தமான ஒன்பது ஏக்கர் நிலம் உள்ளது. இவர் தன்னுடைய நிலத்தில் கால் ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செடியை பயிரிட்டு, தோட்டம் அமைத்து வளர்த்து வந்துள்ளார்.
வேலூரில் கஞ்சா தோட்டம் அமைத்து வளர்த்தவர் கைது! - Ampur cannabis plant
வேலூர்: ஆம்பூர் அருகே மலை கிராமப் பகுதியில் கால் ஏக்கர் நிலத்தில் கஞ்சா தோட்டம் அமைத்து வளர்த்து வந்த நிலத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
kanja
இதுகுறித்த தகவலறிந்த குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு வடக்கு மண்டல துணைக் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், காவல் ஆய்வாளர் செல்வம், தலைமை காவலர்கள் சண்முகம், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கஞ்சா செடி பயிரிட்ட குற்றத்திற்காக நிலத்தின் உரிமையாளர் ஜெய் சங்கரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் கஞ்சா விற்ற மூன்று பேர் கைது!