தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் தீவிரம் - electronic voting machines

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் இன்று (மார்ச் 30) நடைபெற்றன.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் ஒட்டும் பணிகள் தீவிரம்
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் ஒட்டும் பணிகள் தீவிரம்

By

Published : Mar 30, 2021, 7:32 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி, குடியாத்தம் (தனி), கே.வி. குப்பம் (தனி), அணைக்கட்டு ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் அணைக்கட்டு தொகுதிக்குள்பட்ட 351 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேலூர் தொகுதிக்குள்பட்ட 728 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், காட்பாடி தொகுதிக்குள்பட்ட 349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கே.வி. குப்பம் (தனி) தொகுதிக்குள்பட்ட 311 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், குடியாத்தம் (தனி) தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்வேறு இடங்களில் பலத்த காவல் துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இறுதிசெய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று (மார்ச் 30) நடைபெற்றது.

இப்பணிகள் சரியான முறையில் நடைபெறுகின்றனவா என்பதை மாவட்டத் தேர்தல் அலுவலர் சண்முகசுந்தரம் ஆய்வுசெய்து அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தக் குறைபாடும் இல்லாமல் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க:தேர்தலில் தன்னை தக்கவைக்குமா தேமுதிக?

ABOUT THE AUTHOR

...view details